பிரித்தானியாவில் அதிக மற்றும் குறைந்த ஊதியம் பெறும் பணிகள் இவைதான்
பிரித்தானியாவில், 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, அதிக ஊதியம் பெறும் பணிகள் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் பணிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் அதிக ஊதியம் பெறும் பணிகள்
பிரித்தானியாவில், தலைமை நிர்வாகி பொறுப்பிலிருப்போர் மற்றும் மூத்த அதிகாரிகள்தான் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
அவர்கள் சராசரியாக ஆண்டொன்றிற்கு 88,050 பவுண்டுகள் ஊதியம் பெறுவதாக தேசிய புள்ளிவிவர அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிக ஊதியம் பெறுவோர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்போர், மார்க்கெட்டிங், சேல்ஸ் மற்றும் விளம்பரத் துறை இயக்குநர்கள்.
அவர்களுடைய சராசரி ஆண்டு வருவாய், 87,309 பவுண்டுகள்.
மூன்றாவது இடத்திலிருப்போர், தகவல் தொடர்பு தொழில்நுட்ப இயக்குநர்கள். அவர்களுடைய ஆண்டு வருவாய், 86,033 பவுண்டுகள்.
பிரித்தானியாவில் குறைந்த ஊதியம் பெறும் பணிகள்
பள்ளிப் பிள்ளைகள் சாலையைக் கடக்க உதவும் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மதிய உணவு நேர கண்காணிப்பாளர்கள்தான் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள்.
அவர்கள் சராசரியாக ஆண்டொன்றிற்கு 19,860 பவுண்டுகள் ஊதியம் பெறுகிறார்கள்.
குறைந்த வருவார் பெறுவோர் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருப்போர் காபி ஷாப் பணியாளர்கள்.
அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 19,990 பவுண்டுகள்.
குறைந்த வருவார் பெறுவோர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பணி செய்பவர்கள்.
அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 20,189 பவுண்டுகள் ஆகும்.
ஆக, பிரித்தானியாவில் அதிக ஊதியம் பெறுவோருக்கும், குறைந்த ஊதியம் பெறுவோருக்கும் இடையிலான வித்தியாசம், 68,204 பவுண்டுகள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |