உலகில் அதிக வேலைவாய்ப்பு கொண்ட நாடுகள் எது தெரியுமா? வெளியான டாப் 10 பட்டியல்
உலகில் 2021-ஆம் ஆண்டு அதிக வேலை வாய்ப்பு கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில், மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயருகிறார்கள். அதில் முக்கியமான ஒன்றாக வேலை உள்ளது. இந்த வேலைக்காக உலகளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மக்கள் செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆனால், அனைத்து நாடுகளிலும் செல்லும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை.
இதன் காரணமாகவே பிரபல ஆங்கில ஊடகம், உலகில் சிறந்த வேலை வாய்ப்புகளைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1.Netherlands

ஒரு நாடு பணக்கார நாடாக இருக்கிறது என்றால், அந்த நாட்டின் செல்வம், அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் ,அங்கிருக்கும் வேலை வாய்ப்பு போன்றவைகளும் முக்கிய காரணமாக விளங்கும்.
அப்படி ஐரோப்பிய நாடுகளில் பணக்கார நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து, உலகில் மிகப் பெரிய பூக்களை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டின் நிலவரப்படி நெதர்லாந்தில் வேலையின்மை விகிதம் என்பது 2.89-ஆக இருந்தது.
இந்த நாட்டில் உள்ள பிரபலமான வேலைத் துறைகள்
- Energy
- Manufacturing
- industries
- Banking and finance
- Information and Communication
- Technology
- Water resource management
- Agriculture
2.Singapore

வெளிநாடுகளில் வேலை செய்ய சிறந்த நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும், நெதர்லாந்தைப் போன்றே சிங்கப்பூரும் செழிப்பான பொருளாதாரத்தை கொண்ட ஒரு பணக்கார நாடு ஆகும்.
சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த 2018 முதல் 65.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்தின்படி, வேலைவாய்ப்பு பகிர்வு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
- Manufacturing (12.4%)
- Construction (11.2%)
- Services (75.6%)
- Others (0.7%)
3.United Kingdom

ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் இருந்து, பிரித்தானியா அரசு உலகளாவிய செல்வாக்கைக் கொண்டிருந்தது.
Purchasing Power Parity (PPP) கணிப்பு படி, மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடுகளில் பிரித்தானியாவின் பொருளாதாரம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
பிரித்தானியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின்படி, கடந்த ஏப்ரல் 2021-ஆம் ஆண்டு முதல் நாட்டின் வேலைவாய்ப்பு விகிதம் 75.1 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக ஆட்சேர்ப்பு விகிதத்தைக் கொண்ட சில தொழில்கள்
- Agriculture
- Aerospace
- Hospitality and leisure
- Professional services
4.China

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தாலும், சீனா சிறந்த வேலை வாய்ப்பை கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது. ஆசியாவில் வல்லரசு நாடு என்று கூறப்படும் சீனாவின் பொருளாதாரம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மாறியது.
இன்று வரை அதை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2019-ஆம் ஆண்டில், சீனாவின் வேலைவாய்ப்பு விகிதம் 65.05 சதவீதம் ஆக இருந்தது என்று Statista. தெரிவித்துள்ளது.
அதிக அளவில் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படும் தொழில்களின் பட்டியல்
- Agriculture (27%)
- Industries (29%)
- Services (44%)
நாட்டில் அதிக வேலை வாய்ப்புள்ள சில தொழில்கள்
- Textile industry
- Household services
- Building and construction
- Manufacturing
5. Australia

கடந்த 2011-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் அவுஸ்திரேலியா எதிர்பாரத பொருளாதார வளர்ச்சியாக கட்டுமானம் உருவெடுத்தது.
இந்த வளர்ச்சி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அவுஸ்திரேலியா வாழ்வதற்கு உலகின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
Australian Bureau of Statistics-படி, அவுஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் மார்ச் 2021-ல் 5.6 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சிறந்த வேலை வாய்ப்பு கொண்ட தொழில்கள்
- Health services
- Professional services
- Aged care residential services
- Community services
- Personal welfare services
6.Hong Kong

ஹாங்காங்கைப் பொறுத்தவரை உலக அளவில் அதிக வேலை வாய்ப்புகளை கொண்ட நாடாக உள்ளது. ஒரு காலத்தில் சீனாவில் ஒரு நகரமாக இருந்தபோதிலும், இந்த பகுதி இப்போது சுதந்திர நாடாக செயல்படுகிறது.
குறைந்த வரிவிதிப்பு, மலிவான துறைமுக வர்த்தகம் மற்றும் நன்கு நிறுவப்பட்ட சர்வதேச நிதிச் சந்தைகள் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை வகைப்படுத்துகிறது. ஹாங்காங்கின் முக்கிய தொழில்களாக ஜவுளி, வங்கி, ஆடை தயாரிப்பு மற்றும் சுற்றுலா உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஹாங்காங் பாதிப்பை சந்தித்த போதும், 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலையின்மை 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.
7.United States of America

அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. சீனா மற்றும் உலகின் பிற நாடுகளைப் போலவே, அமெரிக்காவும் 2020-ஆம் ஆண்டு அதிக வேலை விகிதத்தை கொண்டிருந்தது.
அது, 2021-ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.
நாட்டில் அதிக வேலைவாய்ப்பு விகிதங்களைக் கொண்ட தொழில்கள்
- Hospitals
- Public schools
- Professional employer organizations
- Colleges and universities
இதற்கு அடுத்தபடியாக 8-வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இங்கு எண்ணெய் தொழில், வேளாண்மை, சுற்றுலாவில் வேலை வாய்ப்பு உள்ளது. 9-வது இடத்தில் மெக்சிகோவும், 10-வது இடத்தில் பிரான்சும் உள்ளது. மெக்சிகோவில் ஜவுளி உணவு மற்றும் பானங்கள், புகையிலை உற்பத்தி, சுற்றுலா போன்றவைகளில் சிறந்த வேலை வாய்ப்பு விகிதம் கொண்டுள்ளது.