2021-ல் அதிக சம்பளம் பெற்ற டாப் -10 விளையாட்டு வீராங்கனைகள்
கடந்த ஆண்டு அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலில், மொத்தம் 57 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர் ஈட்டியுள்ளார்.
உலக அளவில் கடந்த ஆண்டு அதிக சம்பளம் ஈட்டிய டாப்-10 விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 45.9 மில்லியன் டொலர்களை ஈட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் 11.3 மில்லியன் டொலர்களை ஈட்டி மூன்றாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ், ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை Garbine Muguruza, கோல்ஃப் வீராங்கனைகள் ஜின் யங் கோ மற்றும் நெல்லி கோர்டா ஆறு மற்றும் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இந்த பட்டியலில் ஏழாவது இடம் பிடித்துள்ளார். அவுஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை Ashleigh Barty எட்டாவது இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை Candace Parker பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். மொத்தமாக பத்து பேரும் சேர்த்து 167 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த ஆண்டு வருவாயாக ஈட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.