உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அரசியல் தலைவருக்கு மீண்டும் ஊதிய உயர்வு அளிக்கும் நாடு
Highest paid world leader to get salary increase: அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவருக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கம், அதன் பிரதமர் உட்பட அமைச்சர்கள் மற்றும் பிற பதவிகளில் இருப்பவர்களின் ஆண்டுச் சம்பளத்தை உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.
நன்கொடையாக
சிங்கப்பூர் பிரதமர், உலகின் அதிக சம்பளம் வாங்கும் அரசியல் தலைவர் ஆவார். பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியத் தொகுப்பில் 1.4 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் (1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உயர்வு கிடைக்கும்.

இந்த ஊதிய உயர்வை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கு அமைச்சர்களின் ஊதியத்தை உயர்த்துவது அவசியம் என்று வோங் கூறியிருந்தார்.
அமைச்சர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது ஊழலைத் தடுக்கும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் முன்னதாக வாதிட்டிருந்தது. ஆனால், வேலைப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து ஆழ்ந்த கவலை நிலவும் சிங்கப்பூரில் இந்த நடவடிக்கை விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
அவரது சம்பள உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பும், வோங் தான் உலகத் தலைவர்களிலேயே மிக அதிக சம்பளம் வாங்குபவராகத் திகழ்கிறார்.
தற்போது ஆண்டுக்கு 2.2 மில்லியன் சிங்கப்பூர் டொலர் சம்பளம் பெறும் அவர், இனி தனது சம்பளத்தை 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி 3.6 மில்லியன் சிங்கப்பூர் டொலராக (2.8 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறவிருக்கிறார்.
இந்த வரிசையில் அடுத்து, சுமார் 719,000 டொலர் சம்பாதிக்கும் ஹொங்ஹொங் தலைமை நிர்வாகி ஜான் லீயும், அவரைத் தொடர்ந்து 606,000 டொலர் சம்பாதிக்கும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கை பார்மெலினும் உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆண்டுக்கு 400,000 டொலர் ஊதியமாகப் பெறுகிறார், அதே வேளையில் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் 230,000 டொலர் ஊதியமாகப் பெறுகிறார்.
ஊதியம் அதிகரிக்கும்
இந்த நிலையில், பெரும்பாலான குடிமக்கள் சம்பாதிப்பதை விட சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால், அது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதை செவ்வாயன்று வோங் ஒப்புக்கொண்டார்.

அந்நாட்டின் சராசரி மாத வருமானம் 5,775 சிங்கப்பூர் டொலராகும். தற்போது, அமைச்சர்களின் அடிப்படை ஊதியத் தொகுப்பு சுமார் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டொலராக உள்ளது.
புதிய ஊதியத் திட்டத்தின் மூலம், அது சுமார் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டொலராக அதிகரிக்கும். மட்டுமின்றி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முடிவில், செயல்திறனின் அடிப்படையில் அமைச்சர்களின் ஊதியம் அதிகரிக்கும் என்றும் வோங் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |