பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற நபர்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
அவுஸ்திரேலிய பயணிகள் விமானம் ஒன்றை கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்த
அவுஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை துரிதமாக செயல்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதால அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உள்விவகார அமைச்சகம் மற்றும் விமான நிலையங்களுக்கு இடையே அவசர பேச்சுவார்த்தைகளைத் தூண்டியுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், பயணிகள் விமானத்தை கடத்தி மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு கொண்டு செல்ல அந்த நபர் திட்டமிட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும், இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத ஈடுபாடா அல்லது யூத எதிர்ப்பு நடவடிக்கைகளா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
கடத்தல் திட்டம்
இச்சம்பவத்தை அடுத்து, பொதுமக்களுக்கும் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றே சுகாதார அமைச்சர் Mark Butler உறுதி அளித்துள்ளார். மத்திய கிழக்கு நாடு நோக்கி பயணப்பட்ட அந்த விமானமானது பலமுறை எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டுள்ளது.
இதுவும் அந்த கடத்தல் திட்டத்தின் ஒருபகுதியாக இருக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் விமானி ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |