ட்ரம்பை சத்தியப்பிரமாணத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்: ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை

Donald Trump Epstein Files
By Arbin Feb 26, 2026 05:54 PM GMT
Report

எப்ஸ்டீன் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளது

முன்னாள் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், நாடாளுமன்றத்தின் மேற்பார்வைக் குழுவிடம் ஒரு அறிக்கையை அளித்துள்ளார், அதில் ட்ரம்ப் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை திட்டமிட்டு மறைத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

ட்ரம்பை சத்தியப்பிரமாணத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்: ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை | Hillary Clinton Demands Trump Quizzed

மேலும், வெளிப்படைத்தன்மைக்கு உறுதியளித்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளால் நடத்தப்படும் ஒரு குழு, அனைத்து கோப்புகளின் முழுமையான வெளியீட்டை உறுதி செய்ய வேண்டும்.

அந்தக் கோப்புகளை சட்டப்பூர்வமாக திருத்துவது பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் பாதுகாப்பதை உறுதி செய்யும், சக்திவாய்ந்த மனிதர்களையும் அரசியல் கூட்டாளிகளையும் அல்ல.

டர்ம்பிற்கு எதிராக பலர் மிக மோசமானக் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதை FBI விசாரித்துள்ள நிலையில், அந்த ஆவணங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங் உடன் காணப்பட்ட இளம் பெண்கள்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங் உடன் காணப்பட்ட இளம் பெண்கள்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம்

இந்த நிலையில், எப்ஸ்டீன் கோப்புகள் வெளியிட்டதிலிருந்து, ட்ரம்ப் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை நீதித்துறை மறைத்து வைத்ததாக பிரதிநிதி ராபர்ட் கார்சியா வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவருடன் FBI விசாரணை நடத்தியுள்ளது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ட்ரம்ப் தொடர்பான குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை திட்டமிட்டே மூடிமறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தனக்கு எதுவும் தெரியாது

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டிக்கு எழுதிய கடிதத்தில், கார்சியா குறிப்பிடுகையில், டொனால்ட் ட்ரம்ப் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தரவுகளை நீதித்துறை (DOJ) வெளியாடமல் பதுக்கியுள்ளது என்றார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக எந்த தவறும் செய்யவில்லை என்று ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார், மேலும் எப்ஸ்டீன் மீது பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு முன்பு அவருடனான நட்பைத் துண்டித்துவிட்டதாகக் கூறினார்.

இதனிடையே, முன்னாள் வெளிவிவகார செயலாளரான ஹிலாரி கிளிண்டன், எப்ஸ்டீன் அல்லது கிஸ்லைன் மேக்ஸ்வெல்லின் குற்றங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்க ஹவுஸ் அரசியல்வாதிகளிடம் கூறினார்.

ட்ரம்பை சத்தியப்பிரமாணத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்: ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை | Hillary Clinton Demands Trump Quizzed

ஹிலாரியின் சாட்சியம் இரண்டு நாட்கள் நீடிக்கும் வாக்குமூலங்களாகப் பதிவு செய்யப்படுகிறது இதில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் வாக்குமூலம் அளிக்கவிருக்கிறார்.

ஹிலாரி கிளிண்டனுக்கு எப்ஸ்டீனின் முன்னாள் காதலி மேக்ஸ்வெல்லுடன் கிளிண்டன் அறக்கட்டளை மூலம் தொடர்புகள் இருந்தன. மேக்ஸ்வெல் 2010 ஆம் ஆண்டு கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டனின் திருமணத்திலும் விருந்தினராகக் கலந்து கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US