விபத்தில் சிக்கி தான் யார் என்பதையே மறந்த நபர்: மீண்டும் விபத்தில் சிக்கியபோது...
இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் விபத்தொன்றில் சிக்கி தான் யார் என்பதையே மறந்துபோனான்.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் அந்த நபர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட, 45 ஆண்டுகளுக்குப் பின் தான் யார் என்பது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது!

விபத்தில் சிக்கிய சிறுவன்
ஹிமாச்சலிலுள்ள Naddi என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரிக்கி என்னும் 16 வயது சிறுவன், 1980ஆம் ஆண்டு, ஹரியானாவிலுள்ள அம்பாலா என்னுமிடத்துக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்.
தலையில் பலத்த காயம் ஏற்பட, தான் யார் என்பதே அவனுக்கு மறந்துபோனது.
பின்னர் மும்பைக்குச் சென்று அங்கு ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தான் ரிக்கி. அவனுக்கு அவனது பெயர் நினைவில் இல்லாததால், அவனது நண்பர்கள் அவனுக்கு ரவி சௌத்ரி என பெயர் வைத்துள்ளனர்.
தற்போது ரிக்கிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார் ரிக்கி.

மீண்டும் ரிக்கிக்கு தலையில் அடிபட்டுள்ளது. ஆனால், அந்த விபத்துக்குப் பிறகு, Sataun என்னும் ஒரு கிராமமும், அங்குள்ள தெருக்களும், ஒரு வீடும், அங்குள்ள மாமரமும் ரிக்கிக்கு கனவில் வரத் துவங்கியுள்ளன.
பின்னர்தான் ரிக்கி அவை கனவல்ல, தனது பழைய நினைவுகள் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறார்.
ஆக, Sataun என்னும் கிராமம் எங்குள்ளது என தான் வேலை செய்யும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் தேடத் துவங்கியுள்ளார் ரிக்கி.
அப்போது, கூகுள் மேப்பில், ஹிமாச்சலில் Sataun என்னும் ஒரு கிராமம் இருப்பது தெரியவரவே, அங்குள்ள ருத்ர பிரகாஷ் என்பவரை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார் ரிக்கி.

அப்போது, ரிக்கி 1980ஆம் ஆண்டு காணாமல் போனது குறித்து அறிந்த MK சௌபே என்பவருக்கு ரிக்கி குறித்த செய்தி தெரியவர, அவரது உதவியுடன் தன் கிராமத்தை வந்தடைந்துள்ளார் ரிக்கி.
ரிக்கியை மேளதாளத்துடன் அவரது கிராமத்து மக்கள் வரவேற்க, தன் சகோதரிகளான துர்கா, ராம், சந்தர் மோகன், சந்திரா மணி, கௌசல்யா தேவி, கலா தேவி மற்றும் சுமித்ரா தேவி ஆகியோரை சந்தித்துள்ளார் ரிக்கி.

45 ஆண்டுகளுக்கு முன் கானாமல் போன தங்கள் சகோதரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் வாழ்ந்துவந்த நிலையில், அவர் உயிருடன் இருக்கிறார், அவர் தன் குடும்பத்துடன் நன்றாக இருக்கிறார் என்பது தெரியவரவே, ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்கள் அவரது சகோதரிகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |