சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தரம்சாலாவில் இன்று ஐபிஎல் போட்டி - பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு தரம்சாலாவில் ஐபிஎல் போட்டி
இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இத்தொடரில் அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இத்தொடரின் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிச் செல்லும். தற்போது, இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி நுழைந்துள்ளது.
@Cricketracker
இந்நிலையில், உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்று என வர்ணிக்கப்படும் தரம்சாலாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் போட்டி இன்று நடைபெற உள்ளது.
கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு மே 18ம் தேதியன்று பஞ்சாப்-மும்பை அணிகள் மோதின. இதனையடுத்து, 2013ம் ஆண்டு மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், மாநில அரசுக்கும் இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வந்ததால், இங்கு எந்த போட்டிகளும் நடத்தப்படவில்லை.
இதனையடுத்து, இன்று 3652 நாட்களுக்கு பிறகு 64-வது லீக் ஐபிஎல் போட்டி நடைபெற்ற உள்ளது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
View #IPL2023 #Dharamshala pic.twitter.com/rc70xlyhd7
— VK (@Motera_Stadium) May 14, 2023