ஹிஜாப்பிற்கு எதிராக மாணவிகளை காவித்துண்டு அணிய வற்புறுத்தல்! வெளியான பரபரப்பு காட்சிகள்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கல்லுரிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில ஹிந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உடுப்பி மாநிலத்தில் வலதுசாரி கொள்கைகள் கொண்ட ஒரு குழு கண்டபூர் தாலுகாவில் உள்ள SV கல்லுரிக்கு செல்லும் மாணவிகளுக்கு காவிநிற துண்டை எடுத்துச்செல்ல வற்புறுத்தியும் அதை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தும் காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்த தாலுகாவின் வலதுசாரி கொள்கைக்குழுவின் செயலர் நவீன் கங்கொளி NDTVக்கு அளித்த பேட்டியில், நாங்கள் இந்து ஜாக்ரனா வேதிகே என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், கல்லுரிகளில் 18 முதல் 21 வயது வரை சில கட்டுப்பாடுகள் இருப்பதால் அதை இஸ்லாம் மத மாணவர்கள் கடைபிடிக்காமல் ஹிஜாப் அணிந்து வருகின்றனர்.
அவ்வாறு இஸ்லாம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் தங்கள் மாணவர்களும் இனி காவிநிற துண்டுகளை அணிந்து செல்வார்கள். அதற்காகவே அவர்களுக்கு அந்த காவிநிறத்துண்டை வழங்கினோம். அவர்களுக்கு நாங்கள் வற்புறுத்தி இதை செய்ய சொல்லவில்லை எனவும் அவர்கள் எங்கள் சகோதரிகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் இந்துகள் எங்களது பாரம்பரியத்தை காக்கும் உரிமை எங்களுக்கும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையானது உடுப்பி கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் 6 இஸ்லாம் பெண்களை ஹிஜாப் அணிய தடை விதித்ததை தொடர்ந்து ஆரம்பமாகி தற்போது மாநிலம் முழுவதும் காட்டு தீயாய் பரவியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனைத்து தரப்பினரும் அமைதிகாக்குமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவுறுத்தியுள்ளார்.