நாடாளுமன்றத்தில் வெடித்த இந்து மத விவகாரம்: ராகுலுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் சங்கராச்சாரியார்
இந்துக்களை வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி கூறவில்லை என்று சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார்.
இந்து மத விவகாரம்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, " தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய்களை மட்டுமே பேசுகிறார்கள்.
இவர்கள் அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.
இவரின் கருத்துக்கு அனைத்து பாஜக எம்பிக்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். பின்னர் பேசிய மோடி, "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
சங்கராச்சாரியார் ஆதரவு
இந்நிலையில், ஜோதிர் மடத்தின் 46-வது சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்து மதத்தினர் அனைவரையும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி கூறுவதாக சிலர் பேசுகிறார்கள். அது உண்மையில்லை.
ராகுல் காந்தி பேசியதை முழுமையாக கேட்க வேண்டும். இந்துக்கள் சிலர் வன்முறையை தூண்டுவதாகவும் பேசினார். அதோடு இந்த மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருபவர்களை தண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |