மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம்: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ
இந்திய மாநிலம் கேரளாவில் மசூதியில் இந்து திருமணம் நடத்தப்பட்ட வீடியோவை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளா ஸ்டோரி
இந்திய இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதன் முன்னோட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
@twitter
இந்த படம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பலரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ’காம்ரேட் ஃப்ரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில், மசூதியில் இந்து திருமணம் நடத்தப்படும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என ட்விட் போட்டுள்ளனர்.
Bravo ?? love for humanity has to be unconditional and healing ❤️? https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023
இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘மனித குலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த ட்விட் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மசூதியில் நடந்த இந்து திருமணம்
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் இந்து முறைப்படி, ஒரு மசூதியில் திருமணம் நடத்தியிருப்பது அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலிருந்த குடும்பத்தை சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு, மசூதி நிர்வாகம் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்க பணம் கொடுத்துள்ளது.
ஏற்கனவே மத ரீதியான பல பிரச்சனைகள் உண்டாகியிருக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏர். ஆர் .ரகுமான் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.