பலத்த மழையால் ஒரே மேடையில் நடந்த இந்து முஸ்லீம் திருமணம்
பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்து முஸ்லீம் திருமணம்
புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு செய்திருந்தது. அதே திருமண மண்டபத்திற்கு வெளியே இந்து குடும்பம் ஒன்று திருமண ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது மாலை 7 மணியளவில் திருமண நேரம் நெருங்கி முகூர்த்த நேரம் வந்தவுடன், திடீரென வானம் மேகமூட்டமாகி இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும்
இதன் காரணமாக வெளியில் அமைக்கப்பட்டிருந்த விதானம் நனைந்து சுப நிகழ்வு தடை பட்டது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்தனர். மேலும், மழை குறைந்த பாடில்லை.
பின்னர், மண்டபத்தில் தங்கள் திருமண வரவேற்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களை இந்து குடும்ப உறுப்பினர்கள் அணுகினர்.
அவர்களிடம் தங்களது சூழ்நிலையை விளக்கி திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு முஸ்லீம் குடும்பமும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களது மேடையிலே இந்து திருமண சடங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் உதவினார்கள். பின்னர் சரியான நேரத்தில் இந்து திருமணம் நடைபெற்று முடிந்தது. இரு குடும்பத்தினரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |