700 ஆண்டுகளாக குற்றமே நடக்கவில்லை - இஸ்லாமிய நாட்டில் உள்ள ஹிந்து கிராமம்
இஸ்லாமிய நாட்டில் உள்ள ஹிந்து கிராமம் ஒன்றில் 700 ஆண்டுகளாக குற்றமே நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இஸ்லாமிய நாட்டில் உள்ள ஹிந்து கிராமம்
கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, 87 சதவீத மக்கள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு ஆகும்.

ஆனால், இங்கு பாலி மாகாணத்தில் அமைந்துள்ள பங்லி மாவட்டத்தில் உள்ள பெங்லிபுரான் கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் ஹிந்துக்களாக உள்ளனர்.
கிராமத்தின் மையப்பகுதில் பெரிய கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் அருகிலும் சிறிய கோவில்கள் உண்டு. பண்டைய காலம் போலவே தினசரி பிரார்த்தனைகள் மற்றும் பண்டிகைகள் தொடர்கிறது.

டென்மார்க்கில் உள்ள அரசு சாரா நிறுவனமான கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அறக்கட்டளை, உலகின் முதல் 3 சுத்தமான கிராமங்களில் ஒன்றாக இந்த கிராமத்தை அங்கீகரித்துள்ளது.
இந்த கிராமம் சுற்றுலா பயணிகளுக்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது. நாளொன்றுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் உட்பட, 3,500 பார்வையாளர்கள் வரை வந்து செல்கின்றனர்.
700 ஆண்டுகளாக குற்றம் இல்லை
இந்த கிராமத்தில் கடந்த 700 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமாக எந்த குற்றமும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் குப்பை கொட்டுவதற்கும்,மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் புகைப்பிடிக்க அனுமதி உண்டு.

கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் பாரம்பரிய பாணியில் மூங்கிலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள பெண்கள் அமைப்பு, ஒவ்வொரு மாதமும் ஒன்றுகூடி பொது இடங்களை சுத்தம் செய்கின்றனர். கழிவுகள் குவியாமல் இருப்பதை இந்த பெண்கள் உறுதி செய்கின்றது.
மேலும், கரிமக் கழிவுகள் உரமாக மாற்றப்படுகின்றன. பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்கள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
காற்று மற்றும் ஒலி மாசுவை குறைக்கும் வகையில், கிராமத்தின் உள்ளே மோட்டார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |