அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களை ரூ.10,000 கோடிக்கு கைப்பற்றிய நிறுவனம்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடலை ஹிந்துஜா குழுமம் கைப்பற்றியது.
IndusInd International Holdings Ltd (IIHL) நிறுவனம் Reliance Capital (RCAP) நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது.
கடனில் மூழ்கியிருந்த இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்கள் அனைவருக்கும், கடனை செலுத்தி, சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த செயல்முறைக்கு பிறகு, ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் உள்ளிட்ட 40 நிறுவனங்களை தற்போதைய உடன்படிக்கையின் மூலம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது IIHL நிறுவனம்.
இதில் Reliance Nippon Life Insurance, Reliance General Insurance, Reliance Securities, Reliance Asset Reconstruction உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அடங்கும்.
IIHL தலைவர் அசோக் ஹிந்துஜா, "இந்தக் கைப்பற்றலின் மூலம், நாங்கள் வங்கி சேவைகளுடன் இன்சூரன்ஸ் வர்த்தகத்திலும் நுழைகிறோம். இனிவரும் காலங்களில் BFSI துறையில் முழுமையாக வளர்ச்சியை நோக்கி செல்ல உள்ளோம்." என்று கூறியுள்ளார்.
ரூ.9,650 கோடி செலுத்தி IIHL நிறுவனம் வெற்றிபெற்றது, மேலும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸின் நிதி நிலையை மேம்படுத்த ரூ.200 கோடி கூடுதலாக செலுத்தியது.
2021-ல், ஆர்பிஐ (RBI) ரிலையன்ஸ் கேபிடலை நிர்வாக கட்டுப்பாட்டில் எடுத்தது, அதன் பிறகு 2022-ல் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான படிவங்களை வரவேற்றது. 2023-ல் IIHL வெற்றிபெற்று, RBI மற்றும் மற்ற ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து அனுமதிகள் பெற்றது.
இந்நிலையில், IIHL நிறுவனம் 2030-க்குள் 50 பில்லியன் டொலர் மதிப்பை அடையப் போவதாக எதிர்பார்க்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |