அணுகுண்டு வீச்சுக்கு தப்பிப் பிழைத்தவர்கள் ஜப்பான் அரசுக்கு எச்சரிக்கை
அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு தப்பிய ஜப்பானியர்கள், ஆயுதமயமாக்கலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
1945ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் திகதி, அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணுகுண்டு வீசியது. அதில், 80,000 பேர் உயிரிழந்தார்கள்.
மூன்று நாட்களுக்குப் பின் அமெரிக்கா நாகசாகி நகரின் மீது இரண்டாவது அணுகுண்டை வீசியது!
ஜப்பான் அரசுக்கு எச்சரிக்கை
மீண்டும் போரில் ஈடுபடுவதில்லை என அப்போது ஜப்பான் வாக்குறுதி அளித்து, சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்றது என்கிறார் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பான Nihon Hidankyo என்னும் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரலான மசாக்கோ வாடா.
அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசும்போது, வாடாவுக்கு வயது ஒன்று!

ஆனால், இப்போது ஜப்பான் மீண்டும் ஆயுதமயமாக்கலுக்கு திரும்பிவருகிறது என்று கூறும் வாடா, கொடுத்த வாக்குறுதியால் ஏற்படுத்திய நம்பிக்கையை இப்போதைய அரசு நிர்வாகம் அழித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்.
வாடாவைப்போலவே அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பிய மசாஷி லெஷிமா (84) என்பவரும், ஜப்பானின் தற்போதைய ராணுவ பலப்படுத்துதலுக்கும், இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஆயுதப் பந்தயத்துக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை என்கிறார்.
அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசும்போது லெஷிமாவுக்கு வயது 3.
குண்டு வீச்சின் பாதிப்பு காரணமாக தைராய்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லெஷிமாவுக்கு, அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தையும் தொண்டைப் புற்றுநோயால்தான் உயிரிழந்தார் என்பது ஆறாத காயம்.
போரில் அணுகுண்டு வீசப்பட்டு, 81ஆண்டுகள் ஆனபிறகும் அதன் பாதிப்புகள் நீடித்துவரும் நிலையில், மீண்டும் ஜப்பான் ராணுவமயமாக்கலை நியாயப்படுத்திவருவது என் இரத்தத்தைக் கொதிக்கவைக்கிறது என்கிறார் லெஷிமா.

ஜப்பான் தொடர்ந்து இதே பாதையில் பயணிக்குமானால், அது போரில்தான் முடியும் என்று கூறும் லெஷிமா, இன்னொரு போர் வெடித்தால் அது அணு ஆயுதப் போராகத்தான் இருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவிக்கிறார்.
ஆகத்து மாதம் 6ஆம் திகதி, ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 81ஆவது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |