இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா - ஒரே போட்டியில் 9 சாதனைகள்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான போட்டியில் பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
2025 மகளிர் உலக கிண்ண கிரிக்கெட்டின் லீக் போட்டியில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது.
331 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 49 ஓவர்களில் 7 விக்கெட் மட்டுமே இழந்து 331 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம், அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், இரு அணிகளின் தரப்பிலும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
சாதனைகள்
இந்த போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana) 66 பந்துகளில், 80 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக அரைசதம் விளாசிய இந்திய வீராங்கனை, ஒரு ஆண்டில் 1000 ஓட்டங்கள் குவித்த முதல் வீராங்கனை, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாகவும், குறைந்த வயதிலும் 5000 ஓட்டங்களை களை கடந்த வீராங்கனை ஆகிய சாதனைகளை படைத்துள்ளார்.
மேலும், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ந்து 5 முறை 50+ ஓட்டங்களை எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் 155 ஓட்டங்களை பார்ட்னர்ஷிப் மூலம் குவித்தனர். இது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
இதே போல் அவுஸ்திரேலிய வீராங்கனை சுதர்லாந்து, 9.5 ஓவர்கள் முடிவில் 40 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். நேற்று அவரது 24 வது பிறந்தநாளாகும். பிறந்தநாளில் 5 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணி, 330 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் மகளிர் உலக கோப்பையில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 300+ ஓட்டங்கள் எடுத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய அணித்தலைவர் அலீசா ஹெய்லி, 107 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 142 ஓட்டங்கள் எடுத்தார். இதுவே இந்திய மகளிர் அணிக்கு எதிராக ஒரு வீராங்கனையின் அதிகபட்ச ஓட்டமாகும்.
இந்த போட்டியில், இந்தியா தரப்பில் 7 சிக்ஸர்கள் மற்றும் அவுஸ்திரேலியா தரப்பில் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 13 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இது உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிபட்ச சிக்ஸர்கள் ஆகும்.
330 என்ற வெற்றி இலக்கை, 49 ஓவர்களில் 7 விக்கெட் மட்டுமே இழந்து அவுஸ்திரேலியா சேஸ் செய்ததன் மூலம், உலக கோப்பையில் அதிகபட்ச சேசிங் என்ற சாதனையை படைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |