IPL 2024: பஞ்சாப் அணி வரலாற்று வெற்றி: KKR-யை பந்தாடிய ஜானி பேர்ஸ்டோ-ஷசாந்த் சிங் ஜோடி!
ஐபிஎல் 2024 தொடரின் 42வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
KKR-ன் அதிரடி பேட்டிங்
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பந்துவீச்சில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறியதால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ஓட்டங்கள் அபாரமாக குவித்தனர்.
Business as usual for Narine ?pic.twitter.com/danbVSWIy4
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2024
பில் சால்ட் (75) மற்றும் சுனில் நரைன் (71) என அரைசதங்கள் விளாசி அணியின் தொடக்கத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.
அதே சமயம் வெங்கடேஷ் ஐயர் (39), ஷ்ரேயஸ் ஐயர் (28) மற்றும் ரஸல் (24) ஆகிய ஓட்டங்களை குறைந்த பந்தில் சேர்த்து அணியின் ஓட்டங்களை மேலும் சேர்த்தனர்.
டி20யில் வரலாற்று வெற்றி!
பின்னர், 262 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.
பின்னர் வந்த ரோசவ் தன்னுடைய பங்கிற்கு 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் குவித்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
Majje hi majje! ?#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #KKRvPBKS pic.twitter.com/mjOK8EEEez
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷசாந்த் சிங் கொல்கத்தா அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர்.
பஞ்சாப் அணி வீரர் ஜானி பேர்ஸ்டோ, 48 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினார். அவர் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களை விளாசினார்.
மறுபுறம், ஷசாந்த் சிங் 28 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
This is what we pay our internet bills for! ?❤️pic.twitter.com/eMd4zvVYO4
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024
இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்தி பிடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இது என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |