ஏழு மடங்கு பதிலடி உறுதி... ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
தங்களை மீண்டும் சீண்டினால் ஈரான் மீது கடுமையான பதிலடி தாக்குதல் உறுதி என்று இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் நிர் பர்கத் எச்சரித்துள்ளார்.
ஏழு மடங்கு கடுமையாக
அத்துடன், காஸா இடைக்காலப் படையில் முஸ்லிம் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானின் பங்கேற்பு சாத்தியமில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பர்கத் தெரிவிக்கையில், நாங்கள் அவர்களை ஒருமுறை குறிவைத்தோம், அவர்களைக் கடுமையாகத் தாக்கினோம், அவர்கள் எங்களுடன் இனி சண்டைக்கு வந்தால், அவர்களை ஏழு மடங்கு கடுமையாகத் தாக்குவோம் என்றார்.
காஸா தொடர்பில் அமையவிருக்கும் அமைதி காக்கும் படைகள் குறித்து குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் எந்த நாடும் வரவேற்கப்படாது... அதில் பாகிஸ்தானும் அடங்கும் என்றார்.
பல தசாப்தங்களாக ஆயுதமேந்திய கூலிப்படைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மத்திய கிழக்கை ஸ்திரமற்றதாக்குவதாக பர்கத் ஈரான் மீது குற்றம் சாட்டினார்.
வலிமையானவர்கள் அல்ல
ஈரான்... தீமையின் தலைமையாக இருந்து வருகிறது. அவர்கள் இஸ்ரேல் நாட்டை அழிப்பதை ஒரு இலக்காகக் கொண்டுள்ளனர்... ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கினார்கள்... காஸாவில் ஹமாஸையும், லெபனானில் ஹிஸ்புல்லாவையும் பலப்படுத்தினார்கள், மேலும் அவர்கள் இஸ்ரேலுக்கு ஒரு உடனடி அச்சுறுத்தலாகவே உள்ளனர் என்றார்.
மேலும், ஈரானின் இராணுவ பலத்தை குறைமதிப்பிட்ட பர்கத், நாங்கள் அவர்களைக் கடுமையாகப் பலவீனப்படுத்தினோம்... அவர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தினோம்... மேலும் அவர்கள் நினைத்தது போல் அவ்வளவு பெரியவர்களும் வலிமையானவர்களும் அல்ல என்பதையும் நிரூபித்தோம் என்றார்.

இருப்பினும், இஸ்ரேலின் கவனம் மொத்தம் ஈரானில் ஆட்சி மாற்றத்தில் அல்ல, தங்களின் பாதுகாப்பில்தான் உள்ளது என்று பர்கத் வலியுறுத்தினார்.
எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் ஆபிரகாம் ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டுப் பேசிய பர்கத், எங்களது எதிரிகள் எங்களின் நண்பர்களாக மாறும் ஒரு எதிர்காலத்தை நான் நம்புகிறேன் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |