திருமணத்திற்கு மறுத்த பெண்ணிற்கு HIV பாதித்த இரத்தத்தை செலுத்திய இளைஞர்
இந்திய மாநிலம் தெலங்கானாவில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணிற்கு இளைஞர் ஒருவர், HIV பாதித்த இரத்தத்தை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ பரிசோதனை
தெலங்கானா மாநிலம் போச்சாரத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மனோகர். இவரது உறவுக்கார பெண்ணொருவரை திருமணம் செய்து வைக்க மனோகரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மனோகருக்கு பெண்ணின் வீட்டார் தரப்பில் இருந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவருக்கு HIV தொற்று இருப்பது தெரிய வந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனால் ஆத்திரமடைந்த மனோகர் பெண்ணின் வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக தனது ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி இந்த நிகழ்வு நடக்க, உடனடியாக குறித்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து சொல்லப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மனோகரை கைது செய்த பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது அவரது பெற்றோர் HIV-யால் பாதிக்கப்பட்டிருந்ததால், மனோகருக்கு பெண்ணின் பெற்றோர் வைரஸ் பரிசோதனை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |