HIV பாதிக்கப்பட்ட தாயும் தாய்ப்பால் கொடுக்கலாம்! வைத்தியர்களின் புதிய அறிவுரை
எச்ஐவி நோயால் (HIV Positive) பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (American Academy of Pediatrics) நீக்கியுள்ளது.
எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தடையை வாபஸ் பெறுவதற்கான காரணத்தையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் (AIDS) நோய்க்கு வழிவகுக்கும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது தரமான மருத்துவ வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய கொலராடோ பல்கலைகழகத்தின் எச்.ஐ.வி நிபுணர் டாக்டர் லிசா அபோகி (Lisa Abuogi), தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு வைரஸ் பரவும் அபாயத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கிறது என்று கூறியுள்ளார்.
முன்பெல்லாம் தாய்ப்பாலில் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தாக்கும் அபாயம் 30 சதவீதமாக இருந்தது, தற்போது அது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது.
1990-களின் முற்பகுதியில், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 குழந்தைகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை 30க்கும் குறைவாக உள்ளது.
அமெரிக்காவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5,000 குழந்தைகள் பிறக்கின்றன.
எச்.ஐ.வி தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று 1980-களின் முற்பகுதியில் அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் முன்மொழிந்தது.
இப்போது, சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் எச்.ஐ.வி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்துகள் கிடைப்பதன் மூலம், இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US pediatricians reverse advice against HIV-positive mothers breastfeeding, Moms with HIV can breastfeed treatment, HIV-positive mothers breastfeeding