உலகம் முழுவதும் பரவும் மர்ம வைரஸ்... கோவிட் கால கட்டுப்பாடுகளை மீள் அறிமுகம் செய்த நாடு
சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் பல கலக்கமடைந்துள்ள மர்மமான HMPV வைரஸ் பரவல் தொடர்பில் நாடொன்று கோவிட் கால கட்டுப்பாடுகளை மீள் அறிமுகம் செய்துள்ளது.
முகக்கவசம் அணியவும்
திடீரென்று நாடு முழுவதும் பரவும் மர்ம வியாதியை கட்டுக்குள் கொண்டுவர சீன சுகாதாரத்துறை தீவிரமாக போராடி வரும் நிலையில், இந்தியாவின் கர்நாடக மாகாணம் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
HMPV வைரஸ் தொடர்பில் அறிகுறிகள் தென்பட்டால் பொது இடங்களைத் தவிர்க்குமாறு கர்நாடகா அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மட்டுமின்றி கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரை HMPV வைரஸ் தொடர்பில் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இதில் எட்டு மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று மாத பெண் குழந்தை ஆகியோர் பெங்களூரில் சோதனை செய்ததன் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தை, நோய்வாய்ப்பட்டு அகமதாபாத்தில் சிகிச்சை பெற்று வருகிறது. இதனிடையே, கோவிட் கால கட்டுப்பாடுகளை மீள் அறிமுகம் செய்திருந்தாலும், பீதி அடைய வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பல HMPV வைரஸ் தொடர்பில் தற்போது தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கொல்கத்தாவில் ஆறு மாதக் குழந்தை ஒன்று நவம்பரில் நோய்வாய்ப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
எந்த வயதினரும்
இந்த நிலையில் HMPV வைரஸ் தொற்றால் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதில் அச்சப்படத் தேவை இல்லை என்றே இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவிட் போன்று காற்றில் பரவும் நோய் என்பதால், எந்த வயதினரும் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்க மாதங்களில் வைரஸ் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் பரவிவரும் HMPV வைரஸ் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதால் உலகம் முழுக்க கவலை எழுந்துள்ளது. சீனாவில் சிறார்கள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் HMPV வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, பலவீனம் மற்றும் தலைசுற்றல் போன்ற அறிகுறிகளுடன் பெரும் திரளான சிறார்கள் சீனா முழுவதும் குழந்தைகள் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |