மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரையும் HMS Dragon போர் கப்பல்: பிரித்தானிய அரசின் அதிரடி முடிவு
மத்திய கிழக்கு தரைக்கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் பிரித்தானியாவின் HMS Dragon போர் கப்பல் அப்பகுதிக்கு விரைந்து உள்ளது.
விரையும் HMS Dragon போர் கப்பல்
மத்திய கிழக்கு தரைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள போர்ட்ஸ்ஸ்மவுத் தளத்தில் இருந்து இன்று பிரித்தானிய கடற்படையின் அதிநவீன HMS Dragon போர் கப்பல்(Type 45 Destroyer) புறப்பட்டுள்ளது.
சமீபத்தில் சைப்ரஸ் கடற்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை பிரித்தானிய அரசு முன்னெடுத்துள்ளது.

பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இந்த பிராந்தியத்திற்கு ஏற்கனவே தங்கள் இராணுவ பிரிவுகளை அனுப்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், பிரித்தானியா தற்போது தங்கள் கடற்படையின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு போர்க்கப்பலை களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
HMS Dragon போர் கப்பலில் பரந்த வான்வெளியை கண்காணிக்க உதவும் அதிநவீன ரேடார் அமைப்புகள் உள்ளது, அத்துடன் பல வான் இலக்குகளை ஒரே நேரத்தில் பின்தொடரும் திறனும் உள்ளது.
எதிரிகளின் வான்வழி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் சிறப்பு ஆயுதங்களை HMS Dragon போர் கப்பல் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |