அதிரடி காட்டிய ஜெமிமா..ஆனாலும் தோல்வியுற்ற அணி
மகளிர் பிக்பாஷ் டி20 போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.
லீ 59 ஓட்டங்கள்
சிட்னியில் நடந்த WBBL போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதின.
What other way to bring up 50 than with a SIX? Lizelle Lee launches one to reach her half-century! 💥 #WBBL11 pic.twitter.com/6ftaB5VGX1
— Weber Women's Big Bash League (@WBBL) November 15, 2025
மழை காரணமாக 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய ஹோபர்ட் அணி 114 ஓட்டங்கள் எடுத்தது.
லிஸில்லே லீ 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்களும், வையட்-ஹாட்ஜ் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்களும் விளாசினர்.
தோல்வி
பின்னர் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 12 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்களே எடுத்தது.
இதனால், ஹோபர்ட் அணி 16 ஓட்டங்கள் (DLS விதிப்படி) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரேஸ் ஹாரிஸ் 21 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்தார். அதிரடி காட்டிய ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 12 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் எடுத்தார்.
நிக்கோலா கேரி (Nicola Carey), ஹெதர் கிரஹாம் மற்றும் மோலி ஸ்ட்ரானோ தலா 2 விக்கெட்டுகளும், நட் சிவர், லாரென் ஸ்மித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |