WBBL: சமரி அதப்பத்துவின் அணி கடைசி ஓவரில் தோல்வி..நொறுக்கிய இருவர்
மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது.
லௌரா ஹாரிஸ் 7 பந்துகளில் 20 ஓட்டங்கள்
பிரிஸ்பேனின் ஆலன் பார்டர் ஃபீல்டு மைதானத்தில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ், சிட்னி தண்டர் அணிகள் மோதின.
Georgia Voll starts her #WBBL11 campaign with a boundary! pic.twitter.com/pIXOSHUOO4
— Weber Women's Big Bash League (@WBBL) November 9, 2025
முதலில் ஆடிய சிட்னி தண்டர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது. ஹெதர் நைட் 39 ஓட்டங்களும், சமரி அதப்பத்து 32 ஓட்டங்களும், லௌரா ஹாரிஸ் 7 பந்துகளில் 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியில் டேனியில்லே வைட்-ஹாட்ஜ் மற்றும் நிக்கோலா கேரி கூட்டணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஹாட்ஜ், கேரி கூட்டணி
அரைசதம் அடித்த டேனியில்லே வைட்-ஹாட்ஜ் (Danielle Wyatt-Hodge) 52 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
கடைசி ஓவரில் 3 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் எளிதாக இலக்கை எட்டி ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் வெற்றி பெற்றது.
நிக்கோலா கேரி (Nicola Carey) ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் விளாசினார்.
சிட்னி தண்டர் அணியின் தரப்பில் இஸ்மாயில், சமந்தா பேட்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டேனியில்லே வைட்-ஹாட்ஜ் ஆட்டநாயகி விருது பெற்றார்.
🏴 Danni Wyatt-Hodge starts #WBBL11 in fine style with a glorious knock against the Thunder! pic.twitter.com/iZfVFQSLTa
— Weber Women's Big Bash League (@WBBL) November 9, 2025
Up & running in #WBBL11 🚄 💜 pic.twitter.com/5QnSoIyjfC
— Weber Women's Big Bash League (@WBBL) November 9, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |