முதல் முறையாக WBBL கிண்ணத்தை வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ்: வாணவேடிக்கை காட்டிய லீ
மகளிர் பிக்பாஷ் இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மகுடம் சூடியது.
137 ஓட்டங்கள்
பெல்லெரிவ் ஓவல் மைதானத்தில் நடந்த WBBL இறுதிப்போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. 
முதலில் களமிறங்கிய பெர்த் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் சோபி டிவைன் (Sophie Devine) 34 (29) ஓட்டங்களும், பெத் மூனி 33 (26) ஓட்டங்களும் எடுத்தனர்.
பைகீ ஸ்கோல்ஃபீல்ட் 22 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஹெதர் கிரஹாம், லின்சே ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளும், லாரென் ஸ்மித் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மகுடம் சூடிய ஹோபார்ட்
பின்னர் களமிறங்கிய ஹோபர்ட் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
வாணவேடிக்கை காட்டிய லிஸெல்லே லீ ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்களும், நட் சிவர்-ப்ரண்ட் 27 பந்துகளில் 35 ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் WBBL பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |