கொத்துகொத்தா முடி கொட்டுதா? முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான கூந்தலுக்கு Herbal Hair Wash Powder இதோ
கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இரசாயனங்கள் அற்ற இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் மட்டுமே முடி உதிர்வு, பொடுகு பிரச்சனைகளில் இருந்து நம் முடி ஆரோக்கியமாக வளரும்.
அவ்வாறு ஆரோக்கியமுறையிலான இயற்கை ஷாம்பூவை நம் வீட்டிலே எளிதாக தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீயக்காய்- 1/4g
- வெந்தயம்- 20g
- பாசி பயிறு- 50g
- பூந்தி கோட்டை- 100g
- நெல்லிக்காய்- 200g
- ஆவாரம் பூ- 50g
- செம்பருத்தி பூ- 30g
- ரோஜா பூ- 30g
- வெட்டி வேர்- 50g
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் 3- 4 நாட்களுக்கு நன்கு வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது இதனை காயவைத்தபடி நாட்டுமருந்து கடைகளில் கிடைத்தாலும் வாங்கி கொள்ளலாம்.
காய்ந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த பவுடரை மிக்ஸியிலிருந்து வேறுறொரு தட்டிற்கு மாற்றி சூடு ஆற வைக்கவும்.
அடுத்து உங்க தலையில் நீங்கள் அன்றாட பயன்படுத்தும் எண்ணெயை பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்த்து 1/2 மணி நேரம் அப்படியே ஊறவிடவேண்டும்.
ஒரு பவுலில் 2 ஸ்பூன் இந்த ஹெர்பல் பவுடரை சேர்த்து அதில் வடித்த சாதத்தின் கஞ்சியை ஆறவைத்து சேர்க்க வேண்டும்.
இதனை நன்கு கட்டியில்லாமல் கலக்கி தலையில் தேய்த்து குளித்தால் முடி ஆரோக்கியமாகவும், முடி உதிர்வதை தடுத்த நீளமான கூந்தலுக்கு வழிவகுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |