82 வயதில் தந்தையாகும் பழம்பெரும் நடிகர்! குழந்தைக்கு காத்திருக்கும் 29 வயது காதலி
ஹாலிவுட்டின் மூத்த நடிகரான அல் பசினோ தனது 29 வயது காதலி மூலம் தந்தையாக உள்ளார்.
ஆஸ்கர் நாயகன்
அமெரிக்க நடிகரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான அல் பசினோ தற்போது தனது 82வது வயதில் இருக்கிறார். இவர் 29 வயது காதலி நூர் அல்பல்லாஹ் உடன் உறவில் இருக்கிறார்.
Amy Sussman / Getty Images
கடந்த 2022ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இந்நிலையில், அல்பசினோ மற்றும் நூர் அல்பல்லாஹ் ஜோடி தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக எதிர்பார்க்கிறார்கள்.
Twitter/EvaghorasHeor
நூர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏற்கனவே அல்பசினோ மூன்று பிள்ளைகளுக்கு தந்தை ஆவார். அவர்களில் ஜூலி மேரி (33) மற்றும் ஒலிவியா (22), ஆன்டன் (22) இரட்டையர்கள் ஆவர்.
Jason Momoa/Instagram
காட்பாதர் அடையாளம்
1969ஆம் ஆண்டில் Me, Natalie படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அல் பசினோ, The Godfather படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற கதாநாயகனாக மாறினார்.
அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இரண்டு படங்களை இயக்கியும், ஒரு படத்தை தயாரித்தும் உள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நூர் அல்பல்லாஹ்
அல் பசினோவின் தற்போதைய காதலி நூர் அல்பல்லாஹ் கலிஃபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். UCLA திரைப்பட பள்ளியில் பயின்ற இவர் பின்னர் தயாரிப்பாளாராக மாறினார்.
அல் பசினோ தனது தந்தையை விட பெரியவராக தெரிந்தாலும் வயது வித்தியாசம் ஒரு பிரச்சனையாக நூர் அல்பல்லாஹ்வுக்கு தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
MEGA
முன்னதாக, அல் பசினோவின் சக நடிகரான ராபர்ட் டி நிரோ (79) தனது 79வது வயதில் தந்தையானதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Robert Gauthier / Los Angeles Times