நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்! மரணத்தில் நீடிக்கும் மர்மம்? திடுக்கிடும் தகவல்
நட்சத்திர ஹோட்டல் பின்றில் பிரபல நடிகர் பாப் சகெட் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் பாப் சகெட் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். தனது தனித்துவமான உடல் மொழியால் நகைச்சுவைக்கு பெயர்போனவர் என்று கூறலாம்.
இந்நிலையில் இவர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த துக்கமான செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பாப் சகெட் அமெரிக்காவின் Florida பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார்.
கடந்த 9ஆம் திகதி அவரது அறை வெகு நேரமாகியும் திறக்காததால் ஊழியர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகர் பாப் செகெட் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் அடிபட்டுள்ளதாக குடும்பத்தாரிடம் போனில் தெரிவித்துள்ளார்.
இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவர் மரணத்தில் நீடிக்கும் மர்மம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.