Google மற்றும் Open AI-க்கு எதிராக 400 ஹாலிவுட் பிரபலங்கள் அமெரிக்க அரசுக்கு கடிதம்

Google United States of America Hollywood Open AI
By Karthikraja Mar 19, 2025 03:37 PM GMT
Report

Google மற்றும் Open AI நிறுவனத்தின் பரிந்துரைக்கு எதிராக 400 ஹாலிவுட் பிரபலங்கள் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

AI நிறுவனங்களின் பரிந்துரை

Google மற்றும் Open AI போன்ற நிறுவனங்கள், தங்களது AI மாடல்களுக்கு பயிற்சியளிக்க, பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அதன் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் மற்றும் இழப்பீடு வழங்காமல் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை அமெரிக்க அரசுக்கு வழங்கியது. 

google open ai

இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என 400க்கும் மேற்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் கையெழுத்திட கடிதத்தை வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

ஹாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு

இந்த கடிதத்தில், "இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கியுள்ள பரிந்துரை பதிப்புரிமை பாதுகாப்புகளை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது.

2ட்ரில்லியன் டொலர் மதிப்புள்ள கூகிள் மற்றும் 157 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஓபன் ஏஐ நிறுவனங்கள், அமெரிக்காவின் படைப்பு மற்றும் அறிவுத் தொழில்களை சுதந்திரமாக சுரண்டுவதற்காக ஒரு சிறப்பு அரசாங்க விலக்குக்காக வாதிடுகின்றன. 

இந்த நிறுவனங்கள், கணிசமான வருவாய் மற்றும் நிதி கொண்டுள்ள போதிலும், அமெரிக்கா செழிக்க உதவிய பதிப்புரிமை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தவோ அல்லது நீக்கவோ எந்த காரணமும் இல்லை. 

400 hollywood celebrities

அமெரிக்காவின் பொழுதுபோக்குத் துறை 2.3 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, ஆண்டுதோறும் $229 பில்லியன் ஊதியம் வழங்குகிறது. மேலும், வெளிநாடுகளில் அமெரிக்காவின் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்துகிறது.

முறையான உரிமம் பெற வேண்டும்

AI நிறுவனங்கள் அனைத்து தரவு மற்றும் தகவல்களுக்கும் தடையற்ற அணுகலைக் கோரும்போது, ​​அவை திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை துறையை மட்டும் அச்சுறுத்தவில்லை.

கணினிகளுடன் பணிபுரியும் மற்றும் அறிவுசார் சொத்துக்களை உருவாக்கும் அனைத்து எழுத்தாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், விஞ்ஞானிகள், கட்டிடக் கலைஞர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் உள்ளிட்ட பிற துறை நிபுணர்களின் பணியையும் அச்சுறுத்துகின்றன.

மற்ற துறையினர், பதிப்புரிமைதாரர்களிடமிருந்து முறையான உரிமங்களை பெற்று, பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அணுகுவது போல், AI நிறுவனங்களும் முறையான உரிமத்தை பெற்று பயன்படுத்த வேண்டும்.

தற்போதுள்ள அமெரிக்க பதிப்புரிமைச் சட்டத்திலிருந்து AI நிறுவனங்களுக்கு விலக்கு தேவையில்லை" என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிதத்தில், Ben Stiller, Ron Howard, Cate Blanchett, Cynthia Erivo, Paul McCartney உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் என 400க்கும் மேற்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

  

மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US