வர்த்தகப் போரில் சிக்கும் ஹாலிவுட்! அமெரிக்காவுக்கு அடுத்த அடி கொடுத்த சீனா
அமெரிக்காவில் தயாராகும் ஹாலிவுட் படங்களின் வெளியீட்டிற்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா எதிர் வரி விதித்தது. அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் வலுத்துள்ள நிலையில் ஹாலிவுட் திரையுலகம் இதனால் பாதிக்கப்பட உள்ளது.
அதாவது, அமெரிக்காவில் தயாராகும் ஹாலிவுட் படங்களின் வெளியீட்டிற்கு புதிய கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது.
இதுதொடர்பாக சீன தேசிய திரைப்பட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "சீனா மீதான வரிகளை துஷ்பிரயோகம் செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் தவறான நடவடிக்கை, அமெரிக்க திரைப்படங்கள் மீதான உள்நாட்டு பார்வையாளர்களின் ஆதரவு குறைய வழிவகுக்கும்.
நாங்கள் சந்தை விதிகளைப் பின்பற்றுவோம். பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம். ஆனால், இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம்" என தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த முடிவால் ஹாலிவ்ட் படங்களின் சந்தை வெகுவாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |