Bank of Baroda -வில் ரூ.50 லட்சம் Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு?
பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.50 லட்சம் வீட்டுக்கடன் வாங்கினால் 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்ற தகவலை பார்க்கலாம்.
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர்.
ரூ.50 லட்சம் Home Loan
இப்போது நாம் Bank of Baroda -வில் ரூ.50 லட்சத்திற்கு வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு, அந்த வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் EMI என்பது வட்டி விகிதத்தை பொறுத்து தான் அமையும்.
700 முதல் 800 வரை Credit score இருந்தால் Bank of Baroda -வில் வீட்டுக் கடன் 8.40 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கும்.
இப்போது நாம் வாங்கிய வீட்டுக்கடனை 20 வருட காலத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்வோம்.
Bank of Baroda வீட்டுக்கடன் கணக்கீட்டின்படி, 20 வருட காலத்திற்கு ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், 8.40 சதவீத வட்டி விகிதத்தில் மாதம் ரூ.43,075 EMI செலுத்த வேண்டும். அதன்படி, வட்டியாக ரூ. 53,38,054 செலுத்த வேண்டும்.
அந்தவகையில் 20 ஆண்டுகளில் மொத்தமாக அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 1,03,38,054 திருப்பிச் செலுத்த வேண்டும்.
குறிப்பாக நீங்கள் Bank of Baroda அல்லது வேறு வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கினால், வட்டியுடன் சேர்த்து செயலாக்கக் கட்டணத்தையும் (Processing Fee) செலுத்த வேண்டும் அதன்படி, ரூ. 50 லட்சம் வீட்டுக் கடனுக்கு 0.50 % மற்றும் பிற வரிகளை Bank of Baroda செலுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |