ரூ.75 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு?
பல்வேறு வங்கிகளில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாத EMI எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம்.
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர்.
இந்நிலையில், வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு வழங்கும் வட்டி விகிதத்தையும், மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதையும் பற்றி பார்க்கலாம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 8.35 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.64,376 ஆகும்.
இந்தியன் வங்கி (Indian Bank)
இந்தியன் வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 8.4 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.64,613 ஆகும்.
கனரா வங்கி (Canara Bank)
கனரா வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 8.5 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.65,086 ஆகும்.
கோடக் மகிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)
கோடக் மகிந்திரா வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 8.7 சதவீதம் ஆகும். இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.66,039 ஆகும்.
ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
ஆக்ஸிஸ் வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 8.75 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.66,278 ஆகும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank)
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 9 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.67,479 ஆகும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India)
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 9.15 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.68,205 ஆகும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank)
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest rate) 9.4 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வங்கியில் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI ரூ.69,421 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |