கொத்து கொத்தா முடி கொட்டுதா? அடர்த்தியான கூந்தலை பெற இந்த ஒரு பொருள் போதும்
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில் அடர்த்தியாகவும், நீளமாகவும் முடி வளர தயிரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தயிர்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிருடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இதனை முடியில் பூசி 30 நிமிடம் விட்டுவிடவும்.
இதற்கடுத்து கூந்தலை வெதுவெதுப்பான நீரினால் நன்கு கழுவவும்.
இது முடியை ஊட்டப்படுத்தி முடியின் பளபளப்பை அதிகரிக்கும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிருடன் எலுமிச்சை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இதனை முடியில் தடவி 15- 20 நிமிடம் அப்படியே விட்டுவிடவும்.
இதற்கடுத்து கூந்தலை வெதுவெதுப்பான நீரினால் நன்கு கழுவவும்.
இதனை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடி நரைப்பதை குறைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |