இடுப்பு வரை அடர்த்தியாக முடி வளர உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இயற்கை முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கப்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
தயாரிக்கும் முறை
கறிவேப்பிலையை நன்கு அலசி தண்ணீர் இல்லாமல் உலர்த்தி எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெயை ஊற்றி குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், காய்ந்த கறிவேப்பிலையை கடாயில் சேர்த்து சுமார் 10-15 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் எண்ணெயில் கொதிக்கவிடவும்.
பின் இறக்கி எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை எண்ணெயை உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் தடவி, வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் வரை எண்ணெய்யை அப்படியே விட்டுவிடவும்.
பின் லேசான ஷாம்பூவை கொண்டு தலைமுடியை நன்கு அலச வேண்டும்.
கறிவேப்பிலை எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தி வர முடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |