50 வயதிலும் இளமையாக இருக்க உதவும் கிரீம்.., இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்
முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று. சுருக்கம் விழாமல் இருக்க தங்களது வாழ்வியல் முறைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் சுருக்கம் விழாமல் இளமையாக இருக்க உதவும் கிரீம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேன் மெழுகு- ½ ஸ்பூன்
- பாதாம் எண்ணெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- வைட்டமின் ஈ எண்ணெய்- 1 ஸ்பூன்
- ஷியா வெண்ணெய்- ½ ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- ¼ கப்
- தேன்- 1 ஸ்பூன்
- அத்தியாவசிய எண்ணெய்- 5 சொட்டு
தயாரிக்கும் முறை
டபுள் பாய்லர் முறையில் அதில் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு உருகவும்.
அதன் பிறகு, அதை ஆற விட்டு அதில் அத்தியாவசிய எண்ணெய், கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
இப்போது இந்த தயாரிக்கப்பட்ட கலவையை குளிர்வித்து, நுரை உருவாகும் வரை நன்கு கலக்கவும்.
பின் இதனை ஒரு டப்பாவில் சேகரித்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவிக்கொள்ளலாம்.
கிடைக்கும் நன்மைகள்
- சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுக்குகளை அகற்றும்.
- இது முகத்தில் சுருக்கங்களை குறைக்கிறது.
- இது சரும அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- எண்ணெய் பசைகளை போக்கி சருமத்தை அழகுப்படுத்தும்.
- வறண்ட சருமத்தை சரி செய்து ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவும்.
- இரவு நேரத்தில் இந்த க்ரீமை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.
- கற்றாழை ஜெல் இதில் இருப்பதால் முகம் எப்பொழுதும் நீரேற்றமாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |