பொங்கலன்று பொலிவாக இருக்க இந்த ஒரு பேஸ்பேக் போதும்.., எப்படி தயாரிப்பது?
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்த பொங்கல் பண்டிகை அன்று அழகான புதிய ஆடைகளை அணிந்து, பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
புதிய ஆடைகளை அணியும் போது, முகம் மட்டும் பொலிவிழந்து, கருமையாக இருந்தால் அசிங்கமாக இருக்கும்.
அந்தகையில் முகத்தில் உடனடி பொலிவை கொண்டுவர உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்தலாம் என்று பார்க்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- பால்- 5 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியைச் சுற்றி தடவவும்.
இதற்கடுத்து இதனை 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

பிறகு வெதுவெதுப்பான நீரால் மென்மையாக தேய்த்து முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.
இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளலாம்.
இதனை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி உடனடி பளபளப்பை கொடுக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |