முகத்தை வெள்ளையாக்க உதவும் மஞ்சள் + தயிர்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் எப்போதும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகத்தை வெள்ளையாக்க உதவும் இயற்கை பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக் சரும நிறத்தை அதிகரிக்கவும், அதில் உள்ள தயிர் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் உதவுகிறது.
2. தேவையான பொருட்கள்
- தேன்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை சீராக்க உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |