கருப்பான முகம் வெள்ளையாக மாற உதவும் Gold Facial: வீட்டிலேயே செய்யலாம்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க உதவும் Gold Facial எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பால்- 5 ஸ்பூன்
- பருத்தி- சிறிதளவு
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- சர்க்கரை- ½ ஸ்பூன்
- தேன்- ½ ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் பருத்தியை பச்சை பாலில் நனைத்து முகத்தை சுத்தப்படுத்தி முகத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கவும்.
பின் ஒரு கிண்ணத்தில், எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் தேன் கலந்து இவற்றை முகத்தில் தடவி 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
அடுத்து இதனை சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ளவும்.
பின்னர், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து முகத்தில் 10 நிமிடம் தடவி, பின்பருத்தியால் முகத்தை சுத்தம் செய்யவும்.
இதனைத்தொடர்ந்து, உளுத்தம்பருப்பு, பால், தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து பேஸ்பேக் தயார் செய்யவும்.
இறுதியாக இதனை 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு முகத்தை பருத்தியால் சுத்தம் செய்யவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |