உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் பழமையான Facepack.., எப்படி தயாரிப்பது?
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற பழமையான Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- கோதுமை மாவு- 1 ஸ்பூன்
- நெய்- 1 ஸ்பூன்
- மஞ்சள்- ½ ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் இதில் மஞ்சள் சேர்த்து கலந்து அதன் பின் நெய்யைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக, இதில் ரோஸ் வாட்டரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் நன்கு கலக்கவும்.
இதற்குபின் கலவையை முகத்தில் தடவி நன்கு உலர்ந்தபின் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கழுவவும்.
இந்த கலவையை தொடர்ந்து மாதத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்திவரலாம். இந்த கலவை முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவுகிறது.
மேலும், முகத்தில் உள்ள முகப்பருக்கள், கருப்பு தழும்புகள் ஆகியவற்றை அகற்றி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |