முகம் வெள்ளையாக மாற இந்த 2 பொருட்கள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி தண்ணீர்- ½ ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் அரிசி தண்ணீர் கலக்கவும்.
தூங்குவதற்கு முன், இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
காலையில் எழுந்தவுடன் இதனை நன்கு கழுவவும்.
ஜொலிக்கும் பளபளப்பான சருமத்தைப் பெற இதனை தினமும் பயன்படுத்தவும்.
இதனை பயன்படுத்துவதன் மூலம் முன்கூட்டிய வயதானதை திறம்பட எதிர்த்து, தெளிவான, இளமை நிறத்தை பராமரிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |