முகத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவும் இயற்கை பேக்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவும் இயற்கை பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- காபித் தூள்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் காபித்தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 1 ஸ்பூன் மஞ்சள்- 1 சிட்டிகை பால்- 5 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதனை தொடர்ந்து பயனப்டுத்தி வர, முகம் அழகாகவும், பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |