அசுர வேகத்தில் முடி வளர தேங்காய் எண்ணெய்+ கறிவேப்பிலை.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இயற்கை முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க தான் அனைவரும் விரும்புவோம்.
அந்தவகையில், அசுர வேகத்தில் முடி வளர தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
பயன்படுத்தும் முறை
முதலில் தேங்காய் எண்ணெயை ஒரு இரும்பு கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
இப்போது கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெயின் நிறம் கருப்பு நிறமாக மாறும் வரை இந்த எண்ணெயை நன்கு கொதிக்க வைக்கவும்.
இறுதியாக எண்ணெயின் நிறம் மாறியவுடன் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
அதன் பிறகு இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு, முதலில் தலைமுடியை நன்றாக சீவி எண்ணெயை உச்சந்தலையில் தடவி, கைகளால் மசாஜ் செய்யவும்.
ஒரே இரவில் அல்லது குறைந்தது 2 மணிநேரம் முடியில் விட்டுவிட்டு பின் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.
வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த எண்ணெயைத் தடவி வந்தால், முடி வேகமாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |