முடி உதிர்வை நிறுத்த உதவும் இயற்கை ஹேர்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்த உதவும் இயற்கை ஹேர்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் பொடி- 3 ஸ்பூன்
- சீகைக்காய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் நெல்லிக்காய் பொடி மற்றும் சீகைக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இதனை உங்கள் முடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவவும்.

அடுத்து இதனை ஒரு மணி நேரம் அப்படியே விட்டுட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு முடியை அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி உதிர்வு நிரந்தரமாக நின்றுவிடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |