முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் இயற்கை ஹேர்பேக்: எப்படி தயாரிப்பது?
முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும்.
அந்தவகையில் இயற்கை முறையில் முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் ஹேர்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1 மூடி
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- முட்டை- 1
தயாரிக்கும் முறை
முதலில் வெந்தயத்தை இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பின் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் வெந்தயம், தேங்காய் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து பருத்தி துணியில் வடிகட்டி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் முட்டையின் வெள்ளை கருவினை சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது தலையில் இந்த ஹேர் பேக்கினை தலை முடியின் உச்சி முதல் வேர் வரை பூசவும்.
அதன்பிறகு 20 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலை முடியினை அலசி கொள்ளலாம்.
வாரத்திற்கு ஒரு முறை இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நிரந்தரமாக நின்றுவிடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |