முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் இயற்கை பேக்.., எப்படி தயாரிப்பது?
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் இயற்கை பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய்- 3
- சின்ன வெங்காயம்- 5
எப்படி பயன்படுத்துவது?
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இவற்றை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதனை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இறுதியாக தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |