இடுப்பு வரை முடி வளர உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக, பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடியின் நீளத்தை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 3 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம், கருஞ்சீரகம் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு வாணலை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
தேங்காய் எண்ணெய் கொதித்து வந்ததும் அதில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கவிட்டு நிறம் மாறி வந்ததும் அதனை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து இரண்டு மணி நேரத்திற்கு பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |