தலைமுடி மளமளவென வளர உதவும் மூலிகை ஷாம்பு.., எப்படி தயாரிப்பது?
கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இரசாயனங்கள் அற்ற இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் மட்டுமே முடி உதிர்வு, பொடுகு பிரச்சனைகளில் இருந்து நம் முடி ஆரோக்கியமாக வளரும்.
அந்தவகையில், வீட்டிலேயே தலைமுடி அடர்த்தியாக வளர மூலிகை ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீகைக்காய் - 100g
- வெந்தயம் - 20g
- ரேத்தா - 100g
- உலர்ந்த நெல்லிக்காய் - 100g
- கறிவேப்பிலை - 2 கொத்து
- வேப்பிலை - 2 கொத்து
- ரோஸ்மேரி - 20g
தயாயரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சீகைக்காய், நெல்லிக்காய், ரேத்தா, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மறுநாள், அதை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதை தீயில் வைத்து, அதனுடன் ரோஸ்மேரியைச் சேர்த்துத்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
அடுத்து இது ஆறியதும் அதா வடிகட்டி எடுத்து அதை ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.
இந்த மூலிகை ஷாம்பூவை தொடர்ந்து பயன்படுத்து வருவதால் முடி அடர்த்தியாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |