சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த ஒரு சோப்பு போதும்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் சூரிய கதிர்கள் போன்ற காரணத்தினால் முகத்தில் சுருக்கங்கள், பருக்கள் போன்றவை தோன்றி முகத்தின் அழகை கெடுத்துவிடும்.
அந்தவகையில், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வேப்பிலை சோப்பை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சோப்பு கட்டி- 1 துண்டு
- வேப்பிலை- 2 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மிக்ஸியில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள வேப்பிலையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அதில் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து பின் சோப்பு கட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதிக்கின்ற தண்ணீரின் மேல் வைத்து கரைக்கவும்.
சோப்பு கரைந்து வந்தவுடன் அதில் வேப்பிலை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக சோப்பு அச்சில் ஊற்றி 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும் அல்லது 2 மணி நேரம் வெளியில் வைத்தால் வேப்பிலை சோப்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |