வேகமாக முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு மாவு போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் எப்போதும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வேகமாக முகத்தை வெள்ளையாக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- பீட்ரூட் சாறு- 10 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், பீட்ரூட் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர சருமம் பொலிவாக இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- தக்காளி சாறு- 7 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, முல்தானி மிட்டி, கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்திற்கு 4 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பரு தடுக்கப்படும் மற்றும் எண்ணெய் உற்பத்தியும் கட்டுப்படும். மேலும், முகம் இயற்கையாக பொலிவாக மாறக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |