உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகுதா; அப்போ தினமும் இத மட்டும் குடித்து பாருங்க!
நீங்கள் எடை குறைக்க முயற்சிக்கிறீர்களா? உங்களது தினசரி உணவில் சில பானங்களைச் சேர்ப்பதன் மூலம் எடையை குறைக்கலாம்.
இந்த பதிவின் மூலம் உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்களின் ரெசிபிகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடையை குறைக்கும் பானங்கள்
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, உங்கள் உணவில் இருந்து சில வகையான பானங்களை, குறிப்பாக சர்க்கரைகள் மற்றும் அதிக கலோரிகளை சேர்த்த பானங்களை குறைப்பது முக்கியம் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.
முதலில் எடை இழக்க முயற்சிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயங்களில் ஒன்று, கலோரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் நீங்கள் உட்கொள்வதை விட அதிக அளவு கலோரிகளை எரிப்பது.
உடல் எடையை குறைக்க உதவுவதுடன், இந்த பானங்கள் தேவையான ஊட்டச்சத்தை பெறவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
தேவையான பொருட்கள்
-
கொத்தமல்லி விதை - 02 தே.கரண்டி
-
லவங்கம்பட்டை பொடி - 01 தே.கரண்டி
-
தண்ணீர்
-
மிளகு - 03
செய்முறை
-
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி விதை மற்றும் மிளகு இட்டு அதை மெல்லிய தீயில் வறுத்தெடுக்க வேண்டும்.
- வறுத்தெடுத்ததை மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அரைத்து எடுத்த பொடியுடன் லவங்கம்பட்டை பொடியையும் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இறுதியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதனுடன் சேர்த்து வைத்த கலவையை கலக்கவும்.
- இவ்வாறு செய்து எடுத்து அதை வடிக்கட்டி வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்.
- இதை தினமும் இரவு மற்றும் காலையில் கட்டாயம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் எடை குறையும்.